கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
பொன்மலைப்பட்டி பகுதியில், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள குண்டூர் ஊராட்சியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் .
இந்த நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், பொன்மலை பகுதி கழக செயலாளர் இ.எம்.தர்மராஜ், ஒன்றிய கழக செயலாளர் குண்டூர் மாரியப்பன் கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .