திருவெறும்பூர் தொகுதியில்
அதிமுக வேட்பாளர் ப.குமார் தீவிர பிரசாரம்..
திருவெறும்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ப. குமார், திருச்சி மாநகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி பகுதிகளான61 ஆவது வார்டு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ப. குமார் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது, காட்டூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை சேகர் செபாஸ்டினை சந்தித்து ஆசிபெற்றார்.
தொடர்ந்து மாலை நடைபற்ற பிரசாரத்தில், நவல்பட்டு மற்றும் சோழமாதேவி, சோழமாநகர் புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
காட்டூரில் பங்கு பேரவை உறுப்பினர்கள் ஞாதிக்கம்பிள்ளை, பிரகாசம், ஜார்ஜ், அந்தோணி, அருட்சகோதரிகள் தேன்மொழி ஆகியோரும் மற்றும் அதிமுக பகுதி செயலாளர் தண்டபாணி, வட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்