திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்.
மனுத்தாக்கல் அன்று சிறுவர்கள் சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை தனக்கு பெரிய அளவில் ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அழைத்து வநது பாலக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார்
இந்தநிலையில், திருச்சி கே.கே.நகர் பஸ்நிலையம் அருகில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாகவும்
தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உள்பட 300 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.