Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேற்குத் தொகுதி எ.புதூரில் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்.

0

திருச்சியில் ஆறு மாத காலத்திற்குள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் கே. என்.நேரு வாக்குறுதி.

திருச்சி கழக முதன்மை செயலாளரும்
திமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என் நேரு இன்று காலை எடமலைப்பட்டிபுதூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து

பட்டிரோடு, செல்வ நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர் நாகமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று வாக்கு சேரித்தார் ..

அவருக்கு அப்பகுதி மக்கள் கும்ப மரியாதை செய்து ஆரத்தி எடுத்தும் வரவேற்பளித்தனர்..
அப்போது திறந்த வேனில் இருந்து மக்களிடையே உரையாற்றிய போது : –

ஒருங்கிணைந்த
பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆயினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
திமுக ஆட்சி அமையுமானால்
ஆறு மாத காலத்திற்குள் எடமலைப்
பட்டிபுதூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

இதன் வாயிலாக எடமலைப்பட்டி புதூர் பகுதியில் திருச்சி மாநகரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறும்.
சாலை வசதி செய்து தரப்படும்.
குடிநீர் வினியோகம் எவ்வித தங்கு தடையின்றிச் சீராக விநியோகம் செய்யப்படும்.
பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும்.
நான் செல்லுமிடமெல்லாம் பொது மக்கள் ஏகோபித்த ஆதரவு தருகிறார்கள்.

எனவே தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமைவது உறுதி என்றார். இந்த பிரச்சாரத்தின் போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

Leave A Reply

Your email address will not be published.