திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லலூர் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி போட்டியிடுகிறார்.
இதையடுத்து நேற்று காலை பரஞ்ஜோதி தனது பிரச்சாரத்தை சமயபுரம் நான் ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து தொடங்கினார்.
பின்னர் பிரச்சார வாகனத்தில் இருந்து பேசியபோது தேர்தலில் தான் வெற்றி பெற்றால் மண்ணச்சநல்லூர் பகுதி பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.
பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஜெயராமன், ஆதாளி, ராஜமாணிக்கம், நகர செயலாளர்கள் சம்பத், துரை சக்திவேல், மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் புல்லட் ஜான், ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைச்செயலாளர் சின்னையன், திருப்பஞ்சீலி தலைவர் தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜ.க, பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.