திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு
கோடை கால வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு,
பணியில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் தினமும் காலை 11 மணி மற்றும் மாலை 4 மணிக்கு கோடை காலம் முழுவதும் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நீர்மோர் வழங்கும் நடைமுறையை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது துணை போலீஸ் கமிஷனர் வேதரத்தினம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.