சென்னையில் நடைபெற்ற 8வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சியை சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில் 12 தங்கம் 3 வெள்ளி 9 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். சிலம்ப போட்டியானது 6 பிரிவுகளில் நடைபெற்றது.
சிலம்பம் தனி திறமையில் மனோஜ் குமார், உதய பிரகாஷ், சரணேஷ் குமார், ஸ்ரீசரம், மோ.பி.சுகித்தா மற்றும் மங்கல லட்சுமி முதல் பரிசும் ஹரிஹரசுதன் இரண்டாம் பரிசும் லோகேஷ்வர் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.
கம்புச் சண்டை பிரிவில் மோ.பி.சுகித்தா, மனோஜ் குமார், லோகேஷ்வர், நித்திஷ், முகமது ஐயன் மற்றும் எஸ்வந்த் விஜய் முதல் பரிசும் மோனிகா மோனிஷ் மற்றும் ஹரிஹரசுதன் இரண்டாம் பரிசும் மங்கல லட்சுமி, உதய பிரகாஷ், தமிழினியன், கிஷான், சஞ்சீவி ஸ்ரீ, ஸ்ரீ சரண், கிருஷாந்த் மற்றும் சரனேஷ் குமார் மூன்றாம் பரிசும் பெற்று
திருச்சி வருகை புரிந்த சிலம்ப வீரர்களை எம்.ஆர்.எம் பேச்சு பயிற்சி நிறுவனர் ஆர்.சுந்தரேசன் மற்றும் சுகி பிரிண்டர்ஸ் நிறுவனர் மற்றும் உலக இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.மோகன் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிலம்ப வீரர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த சிலம்பக் கலையை நவல்பட்டு காவல் பயிற்சி பள்ளியை சேர்ந்த காவலர் 56 முறைக்கு மேல் இரத்த தானம் செய்த ஆர்.அரவிந்த் அவர்கள் எந்த வித கட்டணமும் இன்றி கற்றுக் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.