உலக மக்கள் அமைதியாக வாழ
கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி.
உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக ஆனந்தமாக அமைதியாக வாழ வரும் 28ஆம் தேதி நடக்க இருக்கும் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க உலக சமுதாய சேவா சங்கம் கூடுதல் இயக்குனர் உலக அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் ஜெயபிரகாஷ் அவர்கள் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அவரவர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என்றும் இதில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்பவர்கள் என்றும் கூறினார்.
மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கின்னஸ் சாதனை சான்றிதழ் அவர்களின் இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஸ்கை யோகா டிவி யூடியூப் சேனலில் தினந்தோறும் மாலையில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் தத்துவ சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு பயன் பெற்று அதன்மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மன நிம்மதியுடனும், நலமுடன் வாழ ஜெயபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.