தேசிய மாணவர் படைத் தலைமையகம், திருச்சி
இன்டர் யூனிட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
திருச்சியில் அமைந்துள்ள ராக்ஃபோர்ட் குரூப் என்சிசி பிரிவின் கீழ், என்சிசி செயல்பாடுகள், 30 மாவட்டங்களில் அமைந்துள்ள 90 கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றன.
என்சிசி மாணவர்களின் துப்பாக்கி சுடும் திறமையை வெளிக்கொண்டுவரும் விதமாக, கடந்த 1 மார்ச் 2021அன்று, ஒன்பது பட்டாலியன்களைச் சேர்ந்த 90 மாணவர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள என்சிசி கேடட் அகாடமியில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், மாநில அளவிலும் தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்கவும் வெற்றிபெறவும் வழிவகை ஏற்படும்.
நடந்து முடிந்த போட்டிகளில், 2 தமிழ்நாடு ஆர்மட் பட்டாலியனைச் சார்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுச் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 34 தமிழ்நாடு பட்டாலியன், தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய குரூப்கமாண்டர் இளவரசன் அவர்கள் வெற்றிபெற்ற மாணவர்களைப் பாராட்டியதுடன், என்சிசி டைரக்டர் ஜெனரல்,டெல்லி அவர்களிடம் இருந்து பதக்கமும் பாரட்டுச் சான்றிதழும் பெற்ற என்சிசி அலுவலர்களின் திறன்மிக்க சேவையை வாழ்த்திப் பேசினார்.