திருச்சி பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்தவர் வகிதா பேகம் (வயது 42). இவரது மகள் ஹனிஷ் பாத்திமா (வயது19) இவர் திருச்சி என்.எஸ்.பி.சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கமாக வீட்டில் இருந்து வேலைக்கு என கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவரின் தாய் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி, முசிறி மணப்பாறை சந்தனம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ரம்யா (வயது 22) இவரது கணவர் பிரசாந்த் (வயது 30) இவர் துறையூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் மணப்பாறை செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரசாந்த் ரம்யாவிடம் தான் கே.கே நகர் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் அதிர்ச்சி அடைந்த ரம்யா அருகிலிருந்த கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.