Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு.

0

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க மதசார்பற்ற ஜனதாதளம் முடிவு.

தமிழ்நாடு ஜனதாதளம் (எஸ்) தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க பாடுபட வேண்டும் காமராஜரின் உண்மை தொண்டர்களையும், முன்னோடிகளையும் தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்க்க பணியாற்ற வேண்டும்,

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும். மதசார்பற்ற ஜனதா தளத்தின் புதிய நிர்வாகிகள், தேர்தல் கமிட்டி மற்றும் ஆட்சிமன்ற குழுவையும் அமைக்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் கட்சிக்கு நிரந்தர உறுப்பினர்களை சேர்த்து வட்ட கிளை, தாலுக்கா, நகரம், மாநகரம், மாவட்ட கமிட்டி அமைத்து தேர்தல் நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யவேண்டும்.

இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவராக தற்போது துணைத் தலைவராக உள்ள காளப்பட்டி பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டார். இவரது தேர்வு குறித்த தீர்மானம் தேசிய தலைவர் தேவகவுடாவிடம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவை பொன்னன், மாநில பொருளாளர் எம் எஸ் கௌடா, மோஜன், செல்லப்பாண்டி, செல்வராஜ் , டேனியல், திருச்சி மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்‌ ஸ்ரீதர், ஜோசப், பெரியசாமி, அமலோபாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.