திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளை சார்ந்த 60 மேற்பட்ட நபர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அந்த கட்சி இருந்து விலகி,கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் ராஜிவ் காந்தி முன்னிலையில்
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைந்து கொண்டனர்.
இணைந்த அவர்களிடம் உரையாற்றும் போது, தேர்தல் பணியில் தீவிரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, கழக தலைவர் அவர்களை அரியணையில் அமர்த்திட சபதம் ஏற்ற அயராது பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார் . உடன் ரமேஷ் அமர்நாத், தேர்போகி பாண்டி, எம். மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர் .