Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறுகனூரில் திமுகவிlன் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

0

திருச்சியில் சிறுகனூரில் நாளை மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாநாடு போன்ற சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் 11வது மாநில மாநாடு நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாநாட்டை சிறப்பு பொதுக் கூட்டமாக நடத்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

இதற்காக சிறுகனூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 369 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டத்துக்காக 90 அடி உயர கொடிக்கம்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சிறப்பு பொதுக் கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி பிரம்மாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று விதமான மேடைகள் தயாராகிக் கொண்டிருக்கிறது

திமுகவை ஆட்சியில் அமர்த்தவும் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை முதல்வராக பதவி ஏற்பதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வு நடைபெறுவதாக கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்துள்ளார.

நாளை நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை வெளியிட இருக்கிறார் .

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை வெளியிட உள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளிலும் முதல் இடம்பெறக்கூடிய வகையில் தமிழ்நாட்டை கட்டமைப்பதற்கான தலைவரின் மாபெரும் கனவு அறிவிக்கப்பட உள்ளது.

சிறப்பு பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.