திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் ஐ.சி.எப். பேராயம் தலைவர் /பேராயர் முனைவர் பா. ஜான்.ராஜ்குமார் (1990-2021) 31 ஆண்டுகள் ஆன்மீக,சமூக சேவை பணியில் நிறைவு விழா, நல திட்ட உதவிகள் வழங்கு இன்று நடைபெற்றது.
விழாவுக்கு மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி. ரமேஷ் தலைமைதாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் K.S சுப்பையா பாண்டியன், மதுரம் சுகாதாரம் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஐவன் மதுரம், யூ.கே. ஆர் புரமோட்டர் மேனேஜிங் டைரக்டர் எஸ். எஸ். ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து நல திட்ட உ உதவிகள் வழங்கினார்கள்.
மகளிர் மேம்பாட்டு மைய தலைவி. M. சகுந்தலா, வரவேற்புரை ஆற்றினார். ஆடிட்டர் M. ரிச்சர்டு, முகவை A.R. ரெத்தினம், பாஸ்டர் A. ராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பாளர் ஆனந்த ராஜ் ஜோசப்,கண் மருத்துவமனை ஆலய ஆயர் S. டேவிட் பரமானந்ம், S. சந்தானகிருஷ்ணன், பிஷப் ஹீபர் கல்லூரி பேராசியர் C. அருள், பேராசியர் P. ரவிசேகர், ஆசிரியர் M அலெக்சாண்டார், பேராசிரியர்M.சந்திரசேகர், மூத்த வழக்கறிஞர் K. செல்வராசு, வழக்கறிஞர் G. ஜெயக்குமார், திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் R. அருள்செல்வி, கமல், ரவி,மதன், S. ராஜலிங்கம், ரெஜினா, திருச்சி சமூக ஆர்வாளர் கூட்டமைப்பு தலைவர் கண்ணன் (எ) ராமகிருஷ்ணன் மற்றும் சமுக சேவகர்கள் முன்னாள் தாசில்தார் K.S. அப்துல் அஜீஸ், தாசில்தார் S. வாசுகி, ஆடிட்டர் B. வீரமணி, ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் இ. ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் 31 ஆண்டு சேவை நிறைவு ஏற்புரையை முனைவர் பா. ஜான்ராஜ்குமார் ஆற்றினார். முடிவில் மனோகரி ராஜ்குமார் நன்றி கூறினார்.