திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சேர்ந்த சின்னம்மா பேரவை திருச்சி மாவட்ட நிறுவனத் தலைவர் செந்தில் தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா அவர்கள் விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை தலைவர் ஒத்தக்கடை செந்தில்
திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் சசிகலா குறிப்பிட்ட தேதியில் பூரண உடல் நலத்துடன் குறிப்பிட்ட தேதியில் விடுதலையாக வேண்டும் என வேண்டி இருந்தார்.
தனது வேண்டுதல் நிறைவேறியதின் காரணமாக இன்று
திருச்சி ஒத்தக்கடை முடுக்கு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில். செல்வ விநாயகர் கோயில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில், கான்வெண்ட் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயில், ஆர்.சி .பள்ளி எதிரில் உள்ள வழிவிடு வீர முனீஸ்வரர் கோயில்
ஆகிய கோயிலில் 501 தேங்காய்கள் உடைத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சின்னம்மா பேரவையினர், அமமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.