Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்வார், திருச்சியில் திருநாவுக்கரசு பேட்டி.

0

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு
கூட்டணி இறுதி செய்யப்பட்டபின் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம்.
திருநாவுக்கரசர் எம்பி பேட்டி .

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டது ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்வார்கள் என்று திருநாவுக்கரசர் எம்பி கூறினார்

திருச்சியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கூட்டம் எஸ்ஆர்எம் ஓட்டலில் நடைபெற்றது .

கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அச்சார் சிங்கிற்கு பாராட்டு விழாவும் நடந்தது விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் ராமச்சந்திரன் அந்தோணி ராஜ் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்டரி ராஜ்குமார் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் சிறுபான்மை பிரிவு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் லாசரஸ் திருச்சி மாவட்ட வியாபார கழகத் துணைத் தலைவர் ரென்சன் ஹர் சரண்சிங் ஹர்விந்தர் சிங் தாமஸ் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் அன்பில் ராஜேந்திரன், அண்ணாதுரை, ராஜ்மோகன், இளைஞர் காங்கிரஸ் கிருஷ்ணா, எழிலரசன், படேல், மலர் வெங்கடேசன். பிரேம், ஷீலா செலஸ், மொண்டிபட்டி ராஜேந்திரன் காளிமுத்து மன்சூர் அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர்
திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நில ஆர்ஜித பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நிலம் வழங்கியவர்கள் அதிக இழப்பீடு தொகை கேட்கிறார்கள். அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டதும் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெறும். இதேபோல திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகள் நிலுவையில் உள்ளன. அதற்கு தேவையான ராணுவ நிலத்திற்கு பதிலாக தமிழக காவல்துறையின் நிலம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்புத் துறையிலிருந்து ஒரே ஒரு ஆணை மட்டும் பிறப்பிக்கப்பட வேண்டும். அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது கட்டுமான பணி மீண்டும் தொடங்கும். பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை இது சம்பந்தமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கரூர் ஜோதிமணி எம். பி. மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அத்துடன் காந்தி சிலையை உரிய இடத்தில் நிறுவ வேண்டும். தமிழகத்தில் ராகுல்காந்தி வருகிற 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் ராகுல் காந்தியும், தி.மு.க தலைவர் மு .க ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்வார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் இடம் கேட்கப்பட்டுள்ளது. நலிவடைந்த நிலையில் உள்ள திருச்சி பாய்லர் ஆலையை மீட்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று எனது கருத்துக்களை தெரிவித்து உள்ளேன் .இங்கு தயாரிக்கப்படும் பாய்லர்களை வெளியில் வாங்குவதற்கான ஆணைகள் குறைந்துவிட்டதால் பாய்லர் ஆலையில் மாற்று பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.