திருச்சிக்கு வருகை தரும்
தமிழக முதலமைச்சருக்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச்செயலாளர்,
முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ப.குமார்
அறிக்கை.
புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் 21.02.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருச்சி விமானம் நிலையம் வருகை தரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள். முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும்
எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு, கலைப்பிரிவு, கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.