திருச்சியில் ..இளம் பெண்ணை பிளேடால் கழுதை அறுத்த வாலிபர் தற்கொலை முயற்சி..
திருச்சி உறையூர் அக்ரஹாரம் பகுதியில் இன்று மாலை இளம் பெண்ணின் வீடு புகுந்து வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி சென்று தன் காதில் விஷமருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அதேபோல் வீட்டில் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவியை உறவினர்கள் திருச்சி அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி லால்குடி வெள்ளானூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 29) இவர் திருச்சி உறையூர் அக்ரஹாரம் தெருவில் உள்ள சத்தியமூர்த்தி என்பவரின் மகள் சுகன்யா (வயது 19) சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சுகன்யாவை மணிகண்டன் ஒருதலை பட்சமாக காதலிப்பதாகவும் அதனால் இன்று மாலை உறையூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மணிகண்டன் தன் கையிலிருந்த பிளேடால் சுகன்யாவின் கழுத்துப் மற்றும் தோள்பட்டை பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் கிழித்துள்ளார்.
வலியால் துடிதுடித்த சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள் அங்கிருந்து ஓடிய மணிகண்டன் அதே பகுதியில் தனது காதில் விஷமருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சாலையில் சென்ற பொதுமக்கள் உடனடியாக அவனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனையா அல்லது ஒருதலை காதலால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.