புதிய நிறுவனம் அறிமுகம்!
காகிதமே தேவையில்லாத, முற்றிலும் மொபைல் அப்ளிகேஷன் மூலம், 2 நிமிடங்களில் உடனடியாகக் காப்பீடைப் பெறலாம்!
ரூ. 2 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான தொகைக்கு தனிநபர் மற்றும் குடும்பம் முழுமைக்கும், தேவைக்கு ஏற்றவாறு மருத்துவக் காப்பீடு எடுக்கும் எளிய நடைமுறை!
தேவையின்போது, ரொக்கப் பணம் தவிர்த்து – பாலிசியின் பிற பலன்களை 20 நிமிடங்களுக்குள் பெறலாம்!
10 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவமனைகளில் முன்பணம் இன்றி சிகிச்சை பெறும் வசதி!
இம்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பலன் கோரி விண்ணப்பித்த 98 % காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
இடைத்தரகர்கள் இல்லாத, முழுமையான இணைய வழி வணிகமுறை!
திருச்சி, பிப். 18. 2021
பொதுக்காப்பீட்டு நிறுவனமான நவி ஜெனரல் இன்சூரன்ஸ் (Navi General Insurance), மொபைல் ஆப் மூலமாக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது ‘2 நிமிட’ ஆன்லைன் ரீடெய்ல் மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி (‘2-Minutes’ online retail health insurance product) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியை இந்நிறுவனத்தின் நவி ஹெல்த் இன்சூரன்ஸ் ஆப் (Navi Health Insurance App) மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
காகிதப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் இந்த வழிமுறை, தற்போது நடைமுறையில் உள்ள விற்பனை வழிகளிலேயே மிக வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து – 2 லட்ச ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியை எடுக்கலாம். சிகிச்சை தேவைப்படும் பாலிசிதாரர்கள், அதற்கான சேவை வழங்கும் தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு, எந்தவித முன்பணமும் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அனுமதி பெற வெறும் 20 நிமிடங்களே போதும்.
அதோடு, இன்றைய நிலையில் இந்த நவி மருத்துவக் காப்பிட்டுப் பாலிசியின் கீழ் பலன் கோரி வந்த விண்ணப்பங்களில் 98% விண்ணப்பங்களுக்கு காப்பீட்டுப் பலன்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு இப்பாலிசி மூலம் சுமார் 400 ஊர்களில் உள்ள 10 ஆயிரம் மருத்துவமனைகளில் ரொக்கப் பணம் எதுவுமின்றி சிகிச்சை பெறுவது சாத்தியம். இந்த நவி மருத்துவக் காப்பீட்டு மொபைல் அப்ளிகேஷனை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நவி மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், 20க்கும் அதிகமான நோய்களின் சிகிச்சைக்குக் காப்பீட்டுப் பலன்களைப் பெறலாம். மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவதில் தொடங்கி, மருத்துவமனையில் சேருவதற்கு முன்னும், பின்னும் மேற்கொள்ளப்படும் பல்வேறு செலவுகளுக்கான கட்டணங்கள், கோவிட் 19 நோய்க்கான சிகிச்சை, இடப்பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புக்கான சிகிச்சை, ஆம்புலன்ஸ் கட்டணம், பூச்சிக்கடி பாதிப்பினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, மகப்பேறு மருத்துவ சிகிச்சை, பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை போன்றவற்றோடு உயிர் பறிக்கும் கொடிய நோய்களுக்கான சிகிச்சை என்பதுவரை பலவும் இதில் அடங்கும்.
இந்தக் காப்பீட்டுப் பாலிசி எடுத்த ஒரு வாடிக்கையாளர், ஓராண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தப் பாலிசி மூலம் சிகிச்சை பெறலாம். எனினும், இவ்வாறு சிகிச்சை பெறும்போது, ஒட்டுமொத்த சிகிச்சை கட்டணம், மொத்த பாலிசி தொகையைத் தாண்டக் கூடாது. இது தவிர, இந்நிறுவனத்தோடு தொடர்பில் இல்லாத, மற்ற இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அதை பின்னர் குறிப்பிட்டு, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, இந்தப் பாலிசி மூலமாக பலன்பெற வாய்ப்புண்டு. முறையான ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான காப்பீட்டுப் பலன் தொகையினை 4 மணி நேரத்தில் பெற்றுவிட முடியும்.
மேலும், இந்தப் பாலிசியை ஒவ்வொரு முறை புதுப்பிக்கும்போதும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், ஒரு பாலிசிதாரருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருத்துவக் காப்பீட்டைப் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை இந்நிறுவனம் வழங்குகிறது.
காப்பீட்டுப் பாலிசி தொகையில் எந்த மாற்றமும் இல்லாத பட்சத்தில் இந்த வசதி எளிதாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிறுவனக் காப்பீட்டுச் சேவையில் எந்த இடத்திலும் முகவர்களுக்கு இடமில்லை, மாறாக எல்லா சேவைகளையும், நிறுவனத்திடமிருந்து நேரடியாக இணையத் தொடர்பு மூலமாக நாமே பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர, டெங்கு, மலேரியா, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பிற – பூச்சிகளின் கடி பாதிப்பால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக, 20 ஆயிரம் ரூபாய் வரையான மதிப்புக்கு கூடுதல் காப்பீட்டுப் பலன்களை வழங்கும் தனித்திட்டத்தை இந்தக் காப்பீட்டுப் பாலிசி, “கூடுதல் சேவை” என்ற வகையில் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய நவி பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராமச்சந்திர பண்டிட் தனி நபருக்கோ, குடும்பம் முழுமைக்குமோ… எப்படியானாலும் மருத்துவக் காப்பீடு வழங்குவதை எளிமையாக்குவதுதான் எங்களது நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அச்சிட்ட காகிதங்களில் கையொப்பம் இடுவது உள்ளிட்ட எந்த வேலையும் இல்லாமல், முற்றிலும் மொபைல் அப்ளிகேஷன் உதவியோடு, இணைய வசதி மூலம் ஆன்லைன் முறையில் இந்தக் காப்பீட்டைப் பெறுவதில் தொடங்கி… இந்தப் பாலிசிப் பலன்களைப் புரிந்து கொண்டு வேறு எந்த சிக்கலும் இல்லாமல் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வது வரை அனைத்தையுமே எளிமையாக்கி உள்ளோம். மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி எடுப்பதும், அதன் மூலம் பலன்களைப் பெறுவதும் பெரும் தலைவலி என்று தற்போதுள்ள பொதுக் கருத்தை மாற்றுவதுதான் எங்கள் நிறுவனத்தின் திட்டம்.
இணையத் தொடர்பு குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் தொடர்ந்து பலரும் இந்த நேரடி டிஜிட்டல் வழி மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெறத் தொடங்கும்பட்சத்தில் எங்கள் நிறுவனத் திட்டத்தில் கிடைக்கும் வெளிப்படையான பலன்கள், அதன் வேகம் மற்றும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களால் விரும்பி ஏற்கப்படும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
நவி நிறுவனம் குறித்து…
தற்போது நிதிச் சேவைகளை வழங்க, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் – குறிப்பாக எளிமை, சிக்கனம் மற்றும் தொடர்பு கொள்ளும் வசதி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வதுதான் நவியின் திட்டம்.
பெங்களுருவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தை சச்சின் பன்சால் மற்றும் அங்கிட் அகர்வால் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.