தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில்
அனைத்து கட்சியினரும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, திமுக சார்பில் மு க ஸ்டாலின், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், பிஜேபி சார்பில் பல்வேறு தேசிய தலைவர்கள், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி என தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அவர்களின் மகன் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு ஏற்பாட்டின் பேரில் ஆட்டோவில் அதிமுகவுக்கு ஆதரவாக பேனர்கள் ஒட்டி திருச்சி மாநகரம் பிரச்சாரம் முழுவதும் செய்யத் தொடங்கி உள்ளனர்.