Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அப்போலாவில் மூளை தண்டுவட சிறப்பு அறுவை சிகிச்சை குறித்து பேட்டி.

0
திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர். சிவம், நிலைய மருத்துவ அதிகாரி, மணிகண்டன் – பொது மேலாளர் விற்பனை பிரிவு, டாக்டர்.ரோகினி ஸ்ரீதர் மண்டல தலைமை அதிகாரி, டாக்டர் கார்த்திக் மயக்கவியல் மருத்துவ நிபுணர், பேஷண்ட் இளங்கோவன் ( 54 வயது,) டாக்டர். மயிலன் சின்னப்பன், மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கேவின் ஜோசப் மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், சாமுவேல் – பொது மேலாளர் அப்போலோ மருத்துவமனை, திருச்சி.

 

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை.

இயலாமையிலிருந்து தன்னம்பிக்கையை நோக்கிய பயணம்.

இளங்கோவன் (வயது 54) கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் இடதுக் கால் செயலிழப்புடன் நடக்க முடியாத நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பொருத்தவரை கூடுதல் சிக்கல் என்னவெனில் அவருடைய வலதுக் கால் ஏற்கனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்

மேற்படி கலந்தாய்வில் அவருக்கு இடதுக் காலில் ஒரு வித இறுக்கமும் மிதமான பலவீனமும் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அதோடு அவருக்கு இரு தோள்களிலும் வலியும் பலவீனமும் அதே காலப்பரப்பில் இருந்திருக்கிறது.

ஒரே காலை மட்டும் பயன்படுத்தி உடலின் எடையை சுமந்து நடப்பதால் ஏற்பத்திருக்கும் தொய்வு என்பதாக அதனை அவர் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெறாமல் இருந்து வந்திருக்கிறார். இப்போது திடீரென நடக்க முடியாத அளவிற்கு சிக்கல் வந்ததும் மருத்துமனை அனுமதிப்பின் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்ற பதட்டத்துடன் அவர் இருந்தார்.

ஏனெனில் அவர் ஏற்கனவே இருதய தொந்தரவுகளுக்கும் சர்க்கரை – இரத்தக் கொதிப்பு நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் அவர் மூளை – தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு அவருக்கு கழுத்து தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது

நோயாளி சிறுநீர் கழிக்கும் சக்தியை இழந்திருப்பதும் அந்நேரத்தில் தெரியவந்தது – கிட்டத்தட்ட 1300 மில்லி சிறுநீர் நீர்ப்பையில் இருந்தும் அவர் அதனை உணர முடியாத நிலையில் இருந்தார். அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன்களும் மருத்துவர்கள் சொல்லிய தண்டுவடப் பிரச்சனையை உறுதி செய்தன. அவருக்கு கழுத்து தண்டுவடத்தை சுற்றியிருக்கும் தசைநார்கள் கெட்டியாகும் தடிமனாகவும் ஆகி அதுவே ஒரு எலும்பைப் போல துருத்திக்கொண்டு தண்டுவடத்தை மிக மோசமாக நகக்கிக்கொண்டிருப்பதாக தெரிய வந்தது. அப்படியாக நகங்கியிருப்பதை விடுவிக்காவிடின் அவர் மிகுந்த மோசமான நிலைக்கு செல்லக்கூடிய சாத்தியங்கள் (பூரண வாதம் மூச்சுத்திணறல் சிறுநீர் மலம் கழிக்க முடியாத நிலை) அவருக்கு தெளிவாக விளக்கிக்கூறப்பட்டன.

தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கேயான பிரத்யேக ஐயங்கள் அனைத்தும் அவருக்கு தெளிவாக விளக்கிக் கூறப்பட்டன. மிகுந்த தெளிவுடனும் நம்பிக்கையுடனும் நோயாளி அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க இருதயம் / சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவர்களின் ஆலோசனையோடு முழு பாதுகப்புடன் அவருக்கு சிகிச்சை திட்டமிடப்பட்டது

அறுவை சிகிச்சையின் போது அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருந்த இரண்டு கழுத்துத் தண்டுவட எலும்புகள் அகற்றப்பட்டு தண்டுவட நரம்பு மண்டலைத்தை நசுக்கிக்கொண்டிருந்த கெட்டியான தசை நார்கள் அந்த நுணுக்கத்துடன் கரைத்து அகற்றப்பட்டன. முடிவில் டைட்டானியம் சாதன உதவியுடன் அவ்வெலும்புகள் இணைக்கப்பட்டு திடமாக்கப்பட்டன.

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மரு.மயிலன் சின்னப்பன் மற்றும் மரு.கெவின் ஜோசப் இந்தக் கடினமான சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்,

சிகிச்சையின் சிறு பிசகு கூட நோயாளிக்கு மிக மோசமான பாதகத்தை அளிக்கக்கூடும் என்ற நிலையில் மிகுந்த துல்லியத்துடன் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே நோயாளிக்கு இடது கால் வலியும் இறுக்கமும் குறைய ஆரம்பித்தது. இரண்டாம் நாளே அவர் நம் துணையுடன் நடக்க ஆரம்பித்தார் மூன்றாம் நாள் நோயாளிக்கு தேவையான அறிவுரைகளுடன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

பின்னர் பதினான்காம் நாள் புறநோயாளியாக அவர் வந்திருந்த போது எந்த வித வாக்கர் அல்லது துணையும் இன்றி சுயமாக நடந்துவந்தார்.

சிறு நீர் கழிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த குழாய் அன்றே அகற்றப்பட்டது – அவரால் எந்த சிரமுமின்றி மிக எளிதாக சிறுநீர் கழிக்க முடிந்தது. முதல் மாத முடிவில் கிட்டத்தட்ட அவரது இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பும் அளவிற்கு அவர் உடலளவிலும் மனதளவிலும் திடமடைந்தார். தோள்ப்பட்டை பலவீனம் சரியானது; காலின் இறுக்கம் முழுமையாக குணமானது – அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு யாருடைய உதவியையும் நாடாமல் தனியே வந்துபோகும் அளவிற்கு தன்னம்பிக்கை பெற்றார். நோயாளியும் அவரது குடும்பமும் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவிற்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் தங்களது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தனர்.

மேலும் மண்டல தலைமை அதிகாரி மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி தன்னகத்தே அனைத்து சிறப்பு நிபுணர்கள் மற்றும் சிறப்புதொழிலில்நுட்பங்களை கொண்டுள்ளது எனவே சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்கப்பெறும் உயர் சிகிச்சைகளை நமது திருச்சியிலே கிடைக்க வழிவகுக்கிறது. மேலும் மூளை மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சையில் அனைத்துவிதமான சிகிச்சைகளை கொடுக்க மருத்துவமனையில் வசதி மற்றும் மருத்துவர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.

இப்பத்திரிகை சந்திப்பில் உடன் மருத்துவமனை பொதுமேலாளர் சாமுவேல், மருத்துவமனை மருத்துவ நிர்வாகி மருத்துவர் சிவம் மற்றும் துணைப்பொதுமேலாளர் சங்கீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.