திருச்சியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 12.02.2021 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் Any Degree, படித்தவர்களும் (வயது கொள்ளலாம். வரம்பு 18-க்கு மேல் 35-க்குள்)
மேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (TC Marksheet, Ration card, Adhar Card) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் நாளை
(12.02 2021 வெள்ளிக்கிழமை அன்று)
முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருச்சிக்கு நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.