திருச்சியில் சிமெண்ட் மற்றும் இரும்பு விலை உயர்வை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், தர்ணா போராட்டமும் நடைபெற உள்ளதாக இந்திய கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தமும் அடையாள தர்ணா போராட்டமும் குறித்து திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
கட்டுமான சங்கத்தலைவர் சரவணன் கூறியதாவது:
கொரோனா காலத்திற்குப் பிறகு கட்டுமான பொருட்களில் மிக முக்கியமான இரும்பு மற்றும் சிமெண்டின் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இரும்பின் விலை 40 சதவீதமும் சிமெண்டின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
கிலோ 47 ரூபாய்க்கு விற்ற இரும்பு இன்று 65 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
ஒரு மூட்டை சிமெண்ட் விலை 350 ஆக இருந்தது இன்று 450 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
எனவே கட்டுமான தொழில் மிகவும் நலிவடைய ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த விலையேற்றத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக குறித்து கட்டுமான பணிகளை வளர்வதற்கு உதவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 47 மையங்களில் இந்த கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த 47 மையங்களிலும் நாளை அந்தந்த மாநிலங்களில் ஒருநாள் கட்டுமான வேலைகளை நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் மட்டும் சுமார் 800 உறுப்பினர்களை கொண்டிருக்கக்கூடிய இந்த கட்டுமான பொறியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் நாளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அகில இந்திய முன்னாள் துணைத்தலைவர் திரிசங்கு, திருச்சி மாவட்ட கட்டுனர் சங்க உறுப்பினர்கள் ரமேஷ், சுப்பிரமணி, ஜோதி மகாலிங்கம், போராட்டக்குழு தலைவர் ரமேஷ் பாபு, செயலாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்