திருச்சியில் கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கியப் பேரவை ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிராம கிறிஸ்தவ போதகர்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
பாஸ்டர்.சாமுவேல் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
ஐ.சி.எப் பேராயத்தின் தலைவர் முனைவர் ஜான். ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
பாஸ்டர். முத்துராஜன் வரவேற்புரையாற்றினார்.
இதில் சுமார் 50 போதகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உண்மை, நீதி, பரிசுத்தம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிறிஸ்துவ அருட்பணியாளர்கள், பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.