திருச்சி பொன்மலை பட்டியில்
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை.
போலீசார் விசாரணை .
திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்தவர் சகாயமேரி இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் ஜெயா (வயது 23) அவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் மாதவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர்
ஒரு ஆண்குழந்தை உள்ளது இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து பொன்மலைப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா வந்தார்.
சகோதரிக்கும் ஜெயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த ஜெயா நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்