திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் பணம் பறித்த கும்பல் .
திருச்சி கிராப்பட்டி கொல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவர் கிராப்பட்டி ரயில்வே காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி இரும்புராடால் தாக்கி பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ராஜா எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீஸார் பாலக்கரை யைச் சேர்ந்த அமுதின் (வயது 40) நான் குடியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) முசிறியைச் சேர்ந்த கோல்ட் குமார் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்