எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்டங்களை வழங்கல்
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக.மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட மகளிரணி செயலாளரும் செயற்குழு உறுப்பினருமான பாக்டர். தமிழரசி சுப்பையா ஏற்பாட்டில் இலவச சேலை, அன்னதானம், குளிர்பானம்,கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை
நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வனிதா, எம் ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், டாக்டர். சுப்பையா பாண்டியன்,
மாவட்ட அணி நிர்வாகிகள் தென்னூர் அப்பாஸ், இலியர்ஸ், ஐ.டி.ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன், ஏ.எம். மீரான்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன்,சுரேஷ் குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,
நிர்வாகிகள் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,மற்றும் வக்கீல் ஜெயஸ்ரீ, சந்திரன், சிந்தாமணி ரமணிலால், மகேஸ்வரி, உறையூர் பகுதி துணை செயலாளர் வசந்தி, குரு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.