சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர்.
சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற சசிகலா விடுதலையாகி நாளை சென்னை திரும்புகிறார். அவர்தான் அதிமுக-வின் பொது செயலாளர் என டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியுள்ளதால் அதிமுகவில் சர்ச்சை எழுந்துள்ளது.