இன்று நடந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார் அதனை வரவேற்கும் விதமாகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக திருச்சி தில்லைநகர் பகுதியில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் அதிமுக
கட்சியினர் வெடி வெடித்து கொண்டாடினர். அருகினில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ஜெயகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக முசிறி ஒன்றியம் குணசீலம் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சள் கோரை, குணசீலம், கல்லூர், வேப்பந்துறை, சென்னை கரை, சித்தாம்பூர், மனப்பாளையம், கிராமங்களுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் குணசீலத்தில் செயல்பட்டு வருவதை கல்லூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரி
அக்கிராம மக்கள் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக தீர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.