உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை நடத்தும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார்.
சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை, மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் சர்வதேச ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தக்கூடிய புற்றுநோய் பற்றிய பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமி அவர்களும் பிரச்சார பேரணி கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரச்சார வாகனத்தின் மூலம் பேரணியாக சென்று, துண்டு பிரசுரம் மற்றும் புற்றுநோய் பற்றிய புத்தகமும் பொதுமக்களுக்கு வழங்கியதுடன்
புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய் எவ்வாறு வருகிறது, புற்றுநோயை எவ்வாறு குணப்படுத்தலாம் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் புற்று நோய்களின் வகைகள் அதன் தன்மைகள் பக்க விளைவுகள் அதற்கான மருத்துவ முறைகள் போன்ற வற்றை மக்களுடைய பிரச்சார வாகனத்தின் மூலம் இன்று முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை தலைவர் மருத்துவர். கோவிந்தராஜ், டாக்டர். சசிபிரியா, டாக்டர் .கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.