இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
மார்ச் மாதம் இந்திய அரசு லாக்டவுன் அறிவித்ததும் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளும் விடுதிகளும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி, விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஷிப்ட் முறையில் என்று சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தொற்று பரவும் அபாயம் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.