திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக செல்வரதி அறிமுகம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக க.செல்வரதி அறிமுகப்படுத்தப்பட்டார்.
இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கிய ராஜ் ,
மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் கோபி, தலைவர் அருண், வீரத்தமிழர் முன்னணி பொருளாளர் மகேந்திரன், துணை செயலாளர் ராசா அழகப்பன், இணைச் செயலாளர் மனோகரன், துணை தலைவர்கள் கௌஸ் மைதீன், ஜோதிராம், பொருளாளர் ஜெய்சன், செய்தி தொடர்பாளர் ஜெய பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் குணசேகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.