திருச்சியில் DREU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
ரயில்வேயில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
முடக்கப்பட்ட 3 தவணை 11 சதவீத டிஏ, டிஆர் ஐ ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உடனே வழங்க வேண்டும். பெண்கள் டிடிக்கள் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் கோச்சுகளில் ஈடுபடுத்தக்கூடாது. டிடிகள் கேடரில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி ஆர் இ யூ திருச்சி கோட்டம் சார்பில் செவ்வாய் அன்று ரயில்வே ஜங்ஷன் டிஆர்எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட தலைவர் மொய்தீன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர், சுப்பிரமணியன்,
டி.ஆர்.இயூ துணை பொது செயலாளர் முருகேசன், உதவி கோட்ட செயலாளர் சரவணன், தலைவர் கரிகாலன், மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.