இன்றைய ராசிப்பலன் – 30.01.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிட்டும். திடீர் பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மரைய கூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிடைக்கும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது உத்தமம்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க கூடும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். தொழிலில் ஓரளவு லாபம் உண்டாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் இருக்கும். தடைப்பட்ட காரியம் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் அமையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் இருக்கும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளித்தாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை தரும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக அமையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல கூடும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து கூடும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் இருக்கும். தொழில் ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் பணவிரயங்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மகரம்
உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு மன அமைதி நீங்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் இருக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது வேண்டும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.
கும்பம்
உங்களின் ராசிக்கு இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் கிட்டும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும்.புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக அமையும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து குவியும்.