மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி தலைமையகம் மக்களின் வாழ்வில் அரசியலின் பங்கையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதற்காக “நான் எம்.எல்.ஏ ஆனால்” எனும் தலைப்பில் பேச்சு போட்டியையும் “சீரமைப்போம் தமிழகத்தை” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியையும் நடத்தவிருக்கின்றது. இதற்கான பரிசுத்தொகையையும் வெளியிட்டிருக்கின்றது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறுகையில்; நான் எம்.எல்.ஏ., ஆனால் ஆன்லைன் பேச்சுப்போட்டி மூலம் மக்களிடம் அரசியல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருங்கால தலைமுறைக்கு வளமான தமிழகத்தை தர முடியும் என உறுதியாக நம்புகின்றோம்.
நான் எம்எல்ஏ ஆனால் என்னும் தலைப்பில் உங்கள் தொகுதி பற்றிய உரையை மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து 63698 77777 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்பவும்.
“சீரமைப்போம் தமிழகத்தை” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் பங்கு பெறுவோர் குறைந்தது 4 பக்கத்திலோ அல்லது 6 பக்கத்திற்கு மிகாமலோ கட்டுரையை எழுதி திருவெறும்பூர் கணேசபுரத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கொண்டு வந்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
கட்டுரைகளும், நான் எம்.எல்.ஏ, ஆனால் என்ற உரையோ வந்து சேர வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 14-ம் தேதி என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்சொன்ன தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும்.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்பவர் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும்.
மொத்த பரிசு தொகை ரூபாய் 5 லட்சமாகவும், வயது வரம்பு அடிப்படையில் மூன்று பிரிவாக நடத்தப்படும் இப்போட்டியில் முதல் பரிசு தலா 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளனர். ஆறுதல் பரிசாக 100 நபர்களுக்கும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என்றார்.