அண்ணன் அரங்கரிடம்
#சீர்வாங்க வடதிருக்காவேரி புறப்பட்டாள் #ஆயிரம் கண்ணுடையாள் #கண்ணபுரம்அரண்மனையிலிருந்து பபுறப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ
ஸ்ரீரங்கம் அரங்கநாதர், தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் தைப்பூசம் இன்று(28.1 21) நடைபெற்று வருகிறது, தற்போது தாய் மகமாயி வடகாவேரியில் உள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயில் கருடமண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, சந்தனம், மஞ்சள், மாலை, பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அடங்கிய தட்டுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக நாதஸ்வரம் இசைக்க, மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் புடை சூழ, ஸ்ரீரெங்கநாதர் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருவார்.சீர்வரிசையை ஸ்ரீரங்கம் கோயில் யானை சுமந்து கொண்டு வருவது வழக்கம்.
அப்போது அதற்கும் முன்பே சமயபுரத்தில் இருந்து வந்து முன்னதாக, கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டு ,மறுகரையில் சமயபுரம் மாரியம்மன் பந்தலில் தன் அண்ணன் #ஸ்ரீரங்கம்ரெங்கநாதரிடம்சீர்வரிசை வாங்க காத்திருப்பார்.
அம்மன் தைப்பூசத்திற்காக கோவிலில் இருந்து #கண்ணாடிபல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் பெற்று வட திருக்காவேரியை அடைகிறாள். இன்று இரவு 10 மணிக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொள்ளிடக்கரையில் தங்கை மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் விசேஷ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து அதிகாலை,1 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு கொள்ளிடக்கரையில் மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வட திருக்காவேரியில் இருந்து அம்மன் சமயபுரம் நோக்கி புறப்படுகிறாள்.
அதிகாலை அம்மன் வழி நடை உபயங்களுடன் நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வந்து மீண்டும் சமயபுரம் திருக்கோவிலை அடைகிறாள் .அப்போது அம்மனை தரிசித்தால் வேண்டிய வரம் பெறலாம்.
ஆம்!அம்மன் தன் அண்ணன் ரெங்கநாதரிடம் சீர்வரிசை பெற்ற மகிழ்சியில் இருப்பாள் .அப்போது அன்னையிடம் நாம் வேண்டியதை வெகுவிரைவில் பெறலாம் என்பது உறுதி.
உலகின் எந்த ஒரு மூலையில் இருந்து கொண்டும் ,எந்த வேளையில் அன்புடன் நினைத்தாலும் தக்க சமயத்தில் காப்பாள் சமயபுர மாரியம்மன் என்பது பல கோடி பக்தர்களின் வாழ்வில் நடந்த,நடந்து கொண்டு இருக்கின்ற சிலிர்க்கவைக்கும் உண்மை.