ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவின் வெண்கல சிலையை திறந்து வைத்த முதல்வர் பேசிய போது,
‘ பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
அன்றைய தினத்தில் சென்னை மெரினாவில் திறக்கப்பட்டு உள்ள ஜெ.சிலைக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் மரியாதை செலுத்தப்படும்.’ என்றும் தெரிவித்தார்.