அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு விழாவிற்கு கழக நிர்வாகிகள் செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் முன்னிலை வைத்தார். பர்வின் கனி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்
1.
நான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
நினைவிடம் திறப்பு விழா 27.1.2021 அன்று நடைபெற உள்ளது. அந்த
நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
2.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, தாய்
உள்ளத்துடன் கொரோனா பாதிக்கப்பட்ட இந்த காலகட்டத்தில்
பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2500 உடன் பொங்கல் பரிசு
தொகுப்பு வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமிக்கும் தமிழக துணை முதல்வர் 0.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
3.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்
” அம்மா மினி கிளீனிக்’ திட்டத்தை தமிழகம் முழுவதும் அறிவித்து
செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை
தெரிவித்து தீர்மானிக்கப்படுகிறது.
4.
ஏழை எளிய கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவிகளும் மருத்துவக்
கல்வி பெற 7.5 % ஒதுக்கீடு வழங்கிய மாண்புமிகு தமிழக
முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்து தீர்மானிக்கப்படுகிறது.
5. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி,
மணப்பாறை, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி
உறுப்பினர்கள் புதிதாக வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்
பணியில் ஒவ்வொரு உறுப்பினரும் களப்பணியாற்றி 2021.ல் மீண்டும் கழக
ஆட்சி அமைய பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒர்மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சாந்தி, ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் இளங்கோ,
விஎம்டி அருண் நேரு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், SS ராவணன், சூப்பர் நடேசன், கும்பக்குடி கோவிந்தராஜன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோகன், பழனிச்சாமி, பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட மாவட்ட நகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.