தனிப்பட்ட முறையில் அலகு குத்தி சாமி கும்பிட காவல்துறை அனுமதி தேவையா?. ஒத்தக்கடை செந்தில் புலம்பல்
தனிப்பட்ட முறையில் அலகு குத்தி சாமி கும்பிட காவல்துறை அனுமதி தேவையா?. ஒத்தக்கடை செந்தில் புலம்பல்
.திருச்சியில் சசிகலா பூரண உடல்நலத்துடன் குறிப்பிட்ட தேதியில் விடுதலையாகவும் ,
அதிமுக தலைமை பொறுப்பேற்று
தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டியும்
திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான
ஒத்தக்கடை செந்தில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயிலில் அலகு குத்தி நாள் முழுவதும் மவுன விரதம் இருப்பதாக கூறி இருந்தார்.
ஆனால் காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
கோவிலில் அலகு குத்துவதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும் நீங்கள் வாங்கவில்லை எனக்கூறி உடனடியாக அலகை அகற்ற வற்புறுத்தினர்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு செந்தில் தான் குத்திய அலகை அகற்றினார்.
பின் காவல்துறை அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் கோவிலில் அலகு குத்தி சாமி கும்பிட அனுமதி வாங்க வேண்டுமா என கேட்டார் ?
ஆனால் காவல்துறையினர் முறையான பதில் எதுவும் கூறவில்லை.
பின்னர் ஒத்தக்கடை செந்தில் கூறும்போது நான் தனிப்பட்ட முறையில் எங்கள் தியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல் நலத்துடன் விடுதலையாக வேண்டி அலகு குத்த காவல் நிலையத்தில் அனுமதி வாங்க வேண்டும் என கூறுகின்றனர்.
இது எந்த விதத்தில் நியாயம் ? நான் தனியாக வந்து சாமி கும்பிட்டேன்,
ஆர்ப்பாட்டம் செய்தனா ? மறியலில் ஈடுபட்டேனா? உண்ணாவிரதம் இருந்தேனா ?
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காவல்நிலையத்தில் முன் அனுமதி பெற வேண்டும். தனிப்பட்ட முறையில் அழகு குத்தி கோயிலில் சாமி கும்பிட எதற்கு அனுமதி வாங்க வேண்டும். ஏன் காவல்துறையினர் அனுமதி இல்லை என கூறுகின்றனர் என்று தெரியவில்லை என புலம்பி சென்றார்.