திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெட்டவாய்த்தலை, குழுமணி, சோமரசம்பேட்டை, இனாம்குளத்தூர், மணப்பாறை நேருஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், நடராஜ், முத்துக்கருப்பன், ஜெயகுமார், செல்வராஜ், புல்லட் ஜான்,
மாவட்ட பொருளாளர் சேவியர், விவேக், பாஸ்கர், செந்தில், ரமேஷ், சின்னையன், அன்பரசு, டாக்டர் ராஜரத்தினம் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.