திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநகரத்தில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு பாடுபடும் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்பு
அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
சசிகலாவின் உத்தரவின்பேரில் டிடிவி தினகரன் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் புதிய கட்சியைத் தொடங்கினார்.
கட்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை நியமித்தார்.
ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே அம்மா பேரவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக சிறப்பாக பணி புரிந்தவர். மேலும் துணை மேயராக திருச்சி மக்களுக்கு சிறந்த பணியாற்றினார்.
டிடிவி தினகரன் அவர்கள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக இரவும் பகலும் பாடுபட்டவர்.
இவர் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை திருச்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களோடு மக்களாக பழகி பெண்கள் இளைஞர்கள் என பலரையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து வருகிறார்.
கொரோனா தடை காலத்தில் தினந்தோறும் திருச்சி மாநகர் முழுவதும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து நலத்திட்டங்களை வழங்கினார்.
இவரின் செயல்பாடு கண்டு தான் இந்தக் கட்சியில் (அ ம மு க ) இணைந்தோம் என்ன இளைஞர்கள் பலரும் கூறிச் சென்றனர். ஏனென்றால் மாவட்டச் செயலாளரும் ஒரு இளைஞரை.
பகுதி செயலாளர்கள் கல்நயக் சதீஷ், சங்கர் போன்றோரும் இளைஞர்கள்.
வாராவாரம் பலரும் அமமுகவில் வருகின்றனர்.
திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் , முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் போன்று பலரும் இருந்தும் அவர்கள் இருப்பதே தெரியவில்லை என அக் கட்சியினரே கூறுகின்றனர்.
எப்போதும் சிரித்த முகத்துடன் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் அன்போடு அரவணைத்து கட்சி பணியாற்றி வருகிறார்.
இவரின் இந்த பண்பினால் திருச்சி மாநகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வளர்ச்சி பெற்று காணப்படுகிறது.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் இவர் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.