Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

98 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜனவரியில் பெய்துவரும் மழை. பிப்ரவரி வரை தொடரும்.

0

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

அப்போது புரெவி, நிவர் புயல் உருவாகி தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது.

சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது.
அதன்பின்னர் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் திடீரென கடந்த 5ஆம் தேதி சென்னையில் இரவு முதல் தொடங்கி 14 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தாலும் புயல் உருவாகாமல் இப்படி மழை பெய்யுமா எனும் அளவுக்கு பெய்தது .

எனினும் ஜனவரி 11 ஆம் தேதியுடன் இந்த வடகிழக்கு பருவமழை முடிவடையும் என்று சொல்லப்பட்டது
ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் பிப்ரவரி மாதம் வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை முடிவில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது. பொதுவாக குளிர்காலத்தில் இந்த பருவ மழை பொழியாது. ஆனால் தற்போது குளிர் காலத்திலும் இந்த மழை பொழிவதால் இந்த முறை தமிழகத்திற்கு குளிர் காலமே இல்லாமல் போகிறது.

ஜனவரி 18ஆம் தேதிக்கு பிறகு வறண்ட காற்று வந்த பிறகுதான் மழைப் பொழிவு நிற்கும். மீண்டும் ஜனவரி மாதம் கடைசியில் தொடங்கக் கூடிய மழை பிப்ரவரி மாதம் வரைக்கும் நீடிக்கவும் செய்யும்.

டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை பலத்த மழை பதிவாகியுள்ளது. புயல் சின்னம் ஏதும் உருவாகாமல் இப்படி அதிகமான மழை கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கருணையே இல்லாமல் பெய்து வருகிறது.

1923ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இப்படி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.