இன்றைய ராசிப்பலன் – 10.01.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் இருக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீன் பேச்சுக்கு ஆளாகக் கூடும்.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சீராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் சுப காரியங்கள் இருக்கும்.நண்பர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் இருக்கும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு வீட்டில் இனிய நிகழ்ச்சி இருக்கும். குழந்தைகள் மீது உற்சாகம் மகிழ்ச்சி இருக்கும்.சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்க யோகம் கூடும். உத்யோக வளர்ச்சிக்கு எடுக்கும் முயற்சி அனைத்திலும் அனுகூல பலன் இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும்.உத்யோகத்தில் சிறுசிறு மாறுதல் செய்வதன் மூலம் லாபத்தை அடையக்கூடும். கடன் பிரச்சினைகள் ஓரளவு நீங்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத டென்ஷன் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். உடல் நிலையில் கவனம் வேண்டும். உற்றார் உறவினர் ஆதரவு கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனை தீரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர் ஆதரவு கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும்.புதிய சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் பங்களிப்பு சீராக இருக்கும்.
துலாம்
உங்கள் ராசிக்கு பொருளாதார நிலை ஓரளவு சீராக அமையும். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி அமையும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சீராக அமையும். வெளியூர் பயணம் செல்லக் கூடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் உண்டாகும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி முன்னேற்றத்தைக் கொடுக்கும். திடீர் பணவரவு இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடி இருக்கும். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ளவர்கள் ஆதரவு கிடைக்கும். சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு மன அமைதி இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை இருக்கும். உத்தியோக இதில் புதிய வாய்ப்பு உண்டாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் இருக்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும்.உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி இருக்கும். பொன்னும் பொருளும் வாங்க ஆர்வம் கூடும்.உத்யோகத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக இருந்தால் லாபம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத இனிய நிகழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியில் இருந்த பிரச்சனைகள் குறைந்து வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக அமையும். புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும். சேமிப்புகள் உயரும்.