இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநில பொருளாளர் தீபா, மாநில நிர்வாகிகள் சி.பாலசந்திரபோஸ், மணிகண்டன், சுசீந்திரா, பிரியசித்ரா, கோபிநாத், பா.லெனின் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,
இந்திய உணவுச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ,
வரும் 23-ந் தேதி (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 150 வது பிறந்த நாளன்று ) தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடத்துவது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும்.
கேங்மேன் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 5000 பேருக்கு கடந்த ஆறுமாத காலமாக பணி ஆணை வழங்கவில்லை.
எனவே
தமிழக அரசு கேங்மேன் பணிக்கு தேர்வுபெற்றவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் மின்வாரிய பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29- ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது.
எந்தவித அடிப்படை வசதிகளோ, தேவையான உபகரணங்களோ இல்லாமல் அவசரகதியில் பழைய கட்டிடங்களுக்கு பெயின்ட் அடித்து அம்மா மினி கிளினிக்குகள் இயங்கி வருகின்றது.
எனவே அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அம்மா மினி கிளினிக் வரை அனைத்து பணியிடங்களையும் நிரந்தரப் பணியிடங்களாக தமிழக அரசு நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.