புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி வானொலி நிலையம் முற்றுகை.
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி வானொலி நிலையம் முற்றுகை.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் (All India Radio Station) முற்றுகை போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள் எனவும், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் பொய் பிரச்சாரங்களை சில தலைவர்களும், அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றனர்.
இதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் P. மேகராஜன், பிரகாஷ், சிதம்பரம் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டார்கள்..