Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன்

0

இன்றைய ராசிப்பலன் – 06.01.2021

மேஷம்
உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு இருக்கும்.குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பொருளாதார தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இருக்கும். சேமிப்புகள் உயரும்.

ரிஷபம்
உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் அலைச்சலை கொடுக்கும். சுபகாரியங்கள் இடையூறு இருக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது.உத்யோகத்தில் சிறுசிறு மாறுதல் செய்தால் நல்ல லாபம் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மிதுனம்
உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பிரச்சினை உண்டாகும்.வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பெரியவர்களின் அன்பு உண்டாகும். கடவுள் வழிபாடு நிம்மதியை கொடுக்கும்.

கடகம்
உங்கள் ராசிக்கு எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வார்கள். உற்றார் உறவினர் மூலம் சுப செய்தி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உற்றார் உடன் பிறப்பு உதவியாக இருப்பார்கள். உத்யோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

சிம்மம்
உங்கள் ராசிக்கு பணவரவு சுமாராக அமையும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றத்தை கொடுக்கும். உடலில் சிறு சிறு உபாதை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிக்கனமாக செயல்பட்டால் பிரச்சினை தீரும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி
உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சனை அனைத்தும் நீங்கும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆடம்பர பொருள் சேர்க்கை இருக்கும்.தொழிலில் திறம்பட செயல்பட்டு காரியத்தை சிறப்பாக செய்வீர்கள்.

துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதி குறையும்.ஆடம்பர செலவுகளால் பணப்பிரச்சனை உண்டாகும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். உற்றார் உறவினர் உதவியாக இருப்பார்கள்.வியாபாரத்தில் எடுக்க முயற்சி அனைத்தும் நல்ல பலனைக் கொடுக்கும்.

விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தாமதமில்லாமல் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சீராக இருக்கும்.

தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை சீராக இருக்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பணி நிமித்தம் வெளியூர் பயணம் செல்லக்கூடும். உத்தியோகத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக அமையும். கடன் தொல்லை தீரும்.

மகரம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரரீதியில் நெருக்கடி உண்டாகும். உடல்நிலையில் சற்று கவனம் வேண்டும். யோகா சம்பந்தப்பட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிக்கனமாக இருப்பது நல்லது.

கும்பம்
உங்களின் ராசிக்கு சோர்வுடனும் மன உளைச்சலுடன் இருப்பீர்கள்.உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். மற்றொரு பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்
உங்களின் ராசிக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். சில ஆடம்பர பொருட்கள் வாங்க கூடும். சுபகாரியங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.