திருச்சி துவரங்குறிச்சி பழைய சந்தைப்பேட்டை தெருவில் வசிப்பவர் ஹபீபா பீவி இவர் கணவர் அப்துல் ரசாக் இறந்து 10 ஆண்டு ஆகின்றது..
கணவர் இறந்த பிறகு துவரங்குறிச்சி பகுதியில் தனது வீட்டிலேயே சேலை வியாபாரம் செய்துள்ளார் ஹபீபா பீவி இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நாகமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் நேற்று மாலை வீடு திரும்பிய ஹபீபா பிவி வழக்கம்போல் அனைவரிடமும் பேசி விட்டு வீட்டில் சென்று உறங்கிய நிலையில்
நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அவர் வீட்டில் புகுந்து அவரை கடுமையாகத் தாக்கி கயிறு, ஆக்ஸா பிளேடு, மற்றும் கற்களால் அடித்து கொலை செய்து உள்ளனர், இதனைத்தொடர்ந்து வழக்கம்போல் இன்று காலை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஹபீபா பிவி நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார் ஹபீபா பிவி..
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமயில் துவரங்குறிச்சி காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
துவரங்குறிச்சி பகுதியில் கடந்த சில வருடங்களாகவே அதிக அளவு திருட்டு நடைபெறுவதாகவும்
ஏற்கனவே திருடுபோன வீடுகளில் இதுவரை வழக்கு முடியாமல் இருப்பதாகவும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்
தனியாக இருக்கும் மூதாட்டியை குறிவைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது