திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில்,
தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர் .
அதனை தொடர்ந்து திருவெறும்பூர் தொகுதி காட்டூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கும் கழக நிர்வாகிகளுடன் மாலை அணி மரியாதையை செலுத்தினர் .
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், பகுதி, செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ், மலைக்கோட்டை மதிவாணன், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .