விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டில் ஆவிகளுடன் பேசும் நிபுணர் ஒருவர் சித்ராவின் ஆவியுடன் தற்போது உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சித்ராவிடம் பேசிய அவர் உங்கள் தற்கொலைக்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு சித்ராவின் ஆவி, அவங்க வந்தாங்க, மிகவும் மோசமானது. என்னால் சொல்ல முடியாது. நான் தனிமையாக உணர்கிறேன். எனக்கு அன்பு வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என கேட்டதற்கு, எல்லாம் முடிந்துவிட்டது என்று சித்ராவின் ஆவி கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? என்ற சந்தேகம் பலரிடமும் ஏற்பட்டுள்ளது.