1 )
திருச்சியில் துணிகரம்.அதிமுக பிரமுகரின் இருசக்கர வாகனம் திருட்டு.போலீசார் விசாரணை.
திருச்சி புத்தூர் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜன் அதிமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார் சம்பவத்தன்று பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார் வண்டியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
2)
திருச்சி பெரிய மிளகுபாறையில்
பத்தாம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்.
திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் சந்தோஷ்குமார், (வயது 14)
இவன் திருச்சி மணிகண்டம் பாத்திமா நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது தந்தை மணிகண்டன் செஷன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்